Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சுவாமி சிவானந்தரின் 53 ஆவது சமாதி தினம்

In ஆன்மீகம்
Updated: 12:13 GMT, Jul 14, 2016 | Published: 12:13 GMT, Jul 14, 2016 |
0 Comments
1285
This post was written by :

சுவாமி சிவானந்தரின் 53 ஆவது சமாதி தினம் இன்றாகும். எல்லோருக்கும் சேவை செய்தல், எல்லோரிடமும் அன்புடன் இருத்தல், கலந்து பழகுதல், எல்லா மக்களிடமும் கடவுளை பார்த்தல் என்பவை சுவாமி சிவானந்தரின் பண்புகளாகும். இதனையே எல்லோருக்கும் கற்பித்தார்.

1887ஆம் ஆண்டு செப்டெம்பர் 8ஆம் திகதி தமிழ்நாட்டில் ஒரு உயர்தர குடும்பத்தில் அவர் பிறந்தார். சிறுவனாக இருந்தபோதே அவரிடம் தெய்வீக குணங்கள் காணப்பட்டன. குறும்புக்காரராகவும் வேடிக்கை விரும்பியாகவும் இருந்தபோதிலும் மற்றவர்களிடத்தில் அன்பாகவும் ஈகை நிரம்பியவராகவும் திகழ்ந்தார்.

வேதாந்த கருத்துக்களில் ஈடுபாடு உள்ளவராக இருந்தாலும் சேவை செய்வதில் ஆர்வம் மற்றும் எல்லோரும் ஓர் இனம் என்ற கருத்துக்கள் அவரிடம் இயற்கையாக இருந்தன. ஆசாரமான குடும்பத்தில் பிறந்திருந்தாலும் குறுகிய பார்வை அற்றவராகவும் யாரிடத்திலும் வெறுப்பு அற்றவராகவும் தூய்மையாக இருந்தார்.

இளைஞரானதும் மனிதகுல சேவையே அவரிடம் மேலோங்கி நின்றது. இதற்காக அவர் மருத்துவரானார். பல ஆண்டுகள் மலேசியாவில் ஏழைகளுக்கு சேவை செய்தார். மருத்துவ மலர் ஒன்று வெளியிட்டு அதில் உடல் ஆரோக்கியம் பற்றி கட்டுரைகள் எழுதினார். இதுமட்டும் போதாது என்று கருதிய அவர் கடவுளின் சித்தத்தினால் மருத்துவத்துறையை விட்டு ஆன்மீக வாழ்க்கையை தேர்ந்தெடுத்தார். இந்தியா திரும்பிய அவர் ஓராண்டு காலம் பல ஊர்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 1924ஆம் ஆண்டு இமய மலையில் உள்ள ரிஷி கேசத்தில் தங்கி தமது மக்கள் சேவைகளை செய்தார்.

அன்பு காட்டுதல், சேவை செய்தல் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு 200 புத்தகங்களுக்கு மேல் எழுதினார். உலகம் முழுவதும் மொழிக்கு அப்பாற்பட்டு மதத்திற்கு அப்பாற்பட்டு அவருக்கு சீடர்கள் இருந்தார்கள். சுவாமி சிவானந்தா 1963ஆம் ஆண்டு ஜூலை 14ஆம் திகதி மகாசமாதி அடைந்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg