Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

புதிய வர்த்தக உடன்படிக்கைக்கு தயாராகும் அவுஸ்திரேலியா – பிரித்தானியா

In வணிகம்
Updated: 08:37 GMT, Jul 17, 2016 | Published: 08:35 GMT, Jul 17, 2016 |
0 Comments
1194
This post was written by :

பிரித்தானியாவுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை ஒன்றை மேற்கொள்வதற்காக அந்நாட்டிற்கு அவுஸ்திரேலியா அழைப்பு விடுத்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேற தீர்மானித்துள்ள நிலையிலேயே இந்த உடன்படிக்கைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பிரித்தானிய பிரதமர் தேரேசா மே கருத்து தெரிவிக்கும்பொழுது, குறித்த நடவடிக்கை மிகவும் விரும்பத்தக்கது எனவும் உற்சாகமூட்டக்கூடியது எனவும் தெரிவித்துள்ளார். பிரெக்சிற் பிரித்தானியாவுக்கு நன்மையையே ஏற்படுத்தும் என தான் நம்புவதாகவும் தெரேசா மே மேலும் தெரிவித்துள்ளார்.

பிரதமர் தெரேசா மேயிற்கு தெலைபேசி அழைப்பு விடுத்த அவுஸ்திரேலிய பிரதமர் மெல்க்கம் டர்ன்புல், அவுஸ்திரேலியா மற்றும் பிரித்தானியாவுக்கு இடையில் விரைவில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவின் சர்வதேச வர்த்தக செயலாளரான லயம் பொக்ஸ் குறிப்பிடுகையில், ‘அவுஸ்திரேலியாவுடன் பல உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

இருப்பினும், பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு முழுமையாக விலகும் வரை இதுபோன்ற உடன்படிக்கைகளில் ஈடுபட முடியாது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg