Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பாகற்காய் சிப்ஸ்

In
Updated: 14:36 GMT, Jul 23, 2016 | Published: 14:35 GMT, Jul 23, 2016 |
0 Comments
1358
This post was written by : Anojkiyan

தேவையான பொருட்கள்

பெரிய பாகற்காய் – 250 கிராம்
பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை
நசுக்கிய பூண்டு – ஒரு டேபிள்ஸ்பூன்
கடலை மாவு – 5 டேபிள்ஸ்பூன்
அரிசி மாவு – 2 டேபிள்ஸ்பூன்
மிளகாய்த்தூள் – 2 டேபிள்ஸ்பூன் (அல்லது காரத்துக்கேற்ப)
மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை
தயிர் – 2 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை

பாகற்காயை வட்டவட்டமாக நறுக்கி உள்ளே இருக்கும் கொட்டையை எடுத்து விடவும். வெட்டிய பாகற்காயை ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் உப்பு, மஞ்சள்தூள், தயிர் சேர்த்துப் பிசிறி 20 நிமிடங்கள் ஊறவிடவும். பிறகு தண்ணீர் விட்டுக் கழுவி நீர்போக பாகற்காயை வடிகட்டவும். (இப்படிச் செய்வதால் கசப்பு தெரியாது).

வடிகட்டிய பாகற்காயுடன் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், நசுக்கிய பூண்டு சேர்த்து, சிறிதளவு நீர் சேர்த்துப் பிசிறவும். கடாயில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் பாகற்காயைப் போட்டு பொரித்து எடுக்கவும். எண்ணெயை வடியவிட்டு காற்றுப்புகாத டப்பாவில் எடுத்து வைக்கவும். இவ்வாறு செய்து 4 நாட்கள் வரை பயன்படுத்தலாம்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg