Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முதல் அரையாண்டு காலப்பகுதிக்கான நிதியியல் பெறுபேறுகளை வெளியிட்டது Huawei

In வணிகம்
Updated: 13:04 GMT, Jul 30, 2016 | Published: 10:48 GMT, Jul 30, 2016 |
0 Comments
1206
This post was written by : Anojkiyan

Huawei Consumer Business Group 2016 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டு காலப்பகுதிக்கான நிதியியல் பெறுபேறுகளை வெளியிட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டு முதல் அரையாண்டின் விற்பனை வருமானம், இதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 41 சதவிதம் இனால் அதிகரித்து, 77.4 பில்லியன் சீன யுவான் தொகையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஏற்றுமதி செய்யப்பட்ட ஸ்மார்ட்போன்களின் எண்ணிக்கை முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 25 சதவிதம் அதிகரிப்புடன் 60.56 மில்லியனை எட்டியுள்ளது.

IDC இன் புள்ளிவிபரங்களின் பிரகாரம், 2016 ஆம் ஆண்டு முதல் அரையாண்டுப் பகுதியில் சர்வதேசரீதியாக ஏற்றுமதி செய்யப்பட்ட ஸ்மாட்போன்களின் எண்ணிக்கை வெறும் 3.1 சதவிதத்தினால் வளர்ச்சி கண்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், Huawei அடையப்பெற்றுள்ள வளர்ச்சியானது தொழிற்துறையில் மிகவும் சிறப்பானது என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg