Chrome Badge
Athavan Newsswitch to mobile site switch to desktop site

பட்டையைக் கிளப்பும் ‘கோமாளி கிங்ஸ்’ ட்ரெயிலர்

In கலைஞர்கள்
Published: 12:57 GMT, Aug 10, 2016 |
0 Comments
1188

தென்னிந்திய சினிமாவிற்கு இணையாக மிக நீண்ட இடைவெளிக்கு பின் இலங்கை தமிழ் சினிமாவில் தயாரிக்கப்பட்டுள்ள முழு நீளப்படமான “கோமாளி கிங்ஸ்” படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.

“கோமாளி கிங்ஸ்” திரைப்படம் கொழும்பு, மட்டக்களப்பு, யாழ்பாணம் மற்றும் மலையக பிரதேசங்களில், அப்பிரதேச மொழிநடைகளே உருவாக்கப்பட்டுள்ளது.

இத்திரைபடத்தின் கதைக்கரு நகைச்சுவை,அதிரடி,காதல் மற்றும் திகில் ஆகிய அத்தனை அம்சங்களையும் உள்ளடக்கியது. “கோமாளி கிங்ஸ்” திரைப்படத்தை இலங்கையின் பிரபல இயக்குனர் கிங் ரட்ணம் எழுதி, நடத்தும் மற்றும் இயக்கியும் உள்ளார்.

இத்திரைப்படத்தின் வெளியீட்டுத் திகதி இன்னும் குறிக்கப்படாத நிலையில், விரைவில் இலங்கை மற்றும் இந்தியத் திரையரங்குகளில் அதனை வெளியிட நடவடிக்கை எடுத்து வருவதாக இயக்குனர் தெரிவித்துள்ளார்.