Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மருந்துகளின் விலைகள் 85 சதவீதத்தால் குறைக்கப்படலாம்

In வணிகம்
Updated: 12:09 GMT, Aug 30, 2016 | Published: 12:09 GMT, Aug 30, 2016 |
0 Comments
1212
This post was written by :

மருந்துகளின் விலைகளை 85 சதவீதத்தால் குறைக்கப்படும் வர்த்தமானி அறிவித்தல் இன்னும் இருவாரத்தினுள் வெளியிட தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையம் தயாராகியுள்ளது. இந்தத் தகவலை சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், இது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் நாளைய தினம் வெளியிடப்படவிருந்தது. எனினும், அதில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ள வேண்டியுள்ளதால் அதற்கு இரண்டு வாரகாலம் தேவைப்படுவதாக மருந்து ஒழுங்குமுறை ஆணையம் கோரியுள்ளது’ என அவர் தெரிவித்துள்ளார்.

தற்பொழுது நாட்டில் பலவகையான பொருட்களின் விலைகளிலும் அதிகரிப்பு மற்றும் குறைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையிலேயே, தற்பொழுது மருந்துகளின் விலைகளைக் குறைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg