Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மணம் வீசும் கூந்தல் பெற சில டிப்ஸ்!

In
Updated: 15:30 GMT, May 5, 2018 | Published: 09:37 GMT, May 4, 2018 |
0 Comments
1315
This post was written by : Anojkiyan

மணம் வீசும் கூந்தல் அழகான நீண்ட கூந்தல் மட்டும் இருந்தால் போதாது. அது நன்கு நறுமணத்துடனும் இருக்க வேண்டும். அப்படி கூந்தலை நறுமணத்துடன் வைப்பதற்கான சில வழிமுறைகள் இதோ!

1. செம்பருத்தி எண்ணெய் கூந்தலுக்கு மிகவும் சிறந்தது. அதனை தொடர்ந்து கூந்தலுக்கு தடவி வந்தால், கூந்தல் கருமையடைவதுடன், மயிர்க்கால்களும் நன்கு வலிமையாகும். மேலும் செம்பருத்தி எண்ணெயில் நல்ல நறுமணம் இருப்பதால், கூந்தலின் மனம் அதிகரிக்கும்.

2. ஹென்னா பொடியை பயன்படுத்தினால் நரை முடியானது நிறம் மாறுவதுடன், கூந்தலும் நல்ல நறுமணத்துடன் இருக்கும்.

3. கொதிக்கும் நீரில் தேயிலையை போட்டு கொதிக்கவிட்டு, பின் அதனை வடிகட்டி, அந்த நீரை கொண்டு கூந்தலை அலசினால், கூந்தல் நல்ல நறுமணத்துடன் இருக்கும்.

4. எலுமிச்சையை கூந்தலுக்கு பயன்படுத்தினால், நறுமணமாக இருப்பதோடு, பொடுகு தொல்லையும் நீங்கும். எனவே எலுமிச்சை சாற்றை கூந்தலில் தடவி ஷாம்பூ போட்டு குளிக்க வேண்டும்.

5. ரோஸ் வோட்டர் கூந்தலுக்கு பெரிய நன்மையை அளிக்கவிட்டாலும், இதை கூந்தலில் தடவி ஊற வைத்து குளித்தால், கூந்தல் நறுமணத்துடன் இருக்கும். அதோடு ரோஸ் வோட்டர் சருமத்திற்கு சிறந்தது.

6. நறுமணமிக்க எண்ணெயை பயன்படுத்தினால் கூந்தல் வாசனையை அதிகரிக்கலாம். அதிலும் மல்லிகை எண்ணெயை கொண்டு தலைக்கு மசாஜ் செய்தால் கூந்தல் நறுமணத்துடன் இருப்பதோடு, கூந்தல் வளர்ச்சியும் அதிகரிக்கும்.

7. வெப்பத்தை தவிர்த்து, குளிர்ச்சியான இடங்களில் இருப்பதும் கூந்தல் நறுமணத்திற்கு வழிவகுக்கும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg