Chrome Badge
android.png
athavannews.png
Athavan Newsswitch to mobile siteswitch to desktop site
தலைப்பு செய்திகள்

புகைத்தல் தொடர்பான ‘அலேர்ட்!': ‘வெட்டு கொத்து’ நகைச்சுவைக் குறும்படம்

In
Published: 12:51 GMT, Sep 3, 2016 |
0 Comments
2258
This post was written by : Varothayan

‘புகைத்தல் புற்றுநோயை மட்டுமல்ல, கடன் பிரச்சனையையும் ஏற்படுத்தும்’ என்ற தகவலுடன் யாழ்ப்பாணத்தில் இருந்து ‘வெட்டு கொத்து’ என்ற 3 நிமிட குறும்படம் வெளிவந்துள்ளது.

எம்மவர்கள் மத்தியில் நகைச்சுவைக் குறும்படங்களின் வரவு மிகக்குறைவாக இருக்கும் தருணத்தில், வித்தியாசமான கதைக்களத்துடன் நகைச்சுவையாக அதேநேரம் சமூகத்திற்கு ஒரு சின்ன செய்தியையும் சொல்லிப் போகிறது இப்படம். மொத்தமே 4 நடிகர்களுடன், ஒரே ஒரு படப்பிடிப்பு தளத்தில் இக்குறும்படம் படமாக்கப்பட்டுள்ளது.

கிருத்திகனின் கதை மற்றும் திரைக்கதையில் உருவாகியிருக்கும் இக்குறும்படத்தை கானா வரோ இயக்கியுள்ளார். ஒளிப்பதிவு நிஷாந்தன், படத்தொகுப்பு நிரோஷ், இசையமைப்பு தர்சனன். கிருத்திகன், வரோதயன், மயூரப்பிரியன் மற்றும் கோபிரஞ்சன் ஆகியோர் இதில் நடித்திருக்கின்றார்கள்.

ஆதவன் செய்திகளை E-mail மூலம் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.