Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

சிக்கன நடவடிக்கை அமுல்படுத்தலுக்கு நியாயம் கற்பித்த எகிப்திய பிரதமர்

In உலகம்
Published: 10:40 GMT, Nov 5, 2016 |
0 Comments
1319
icon_com
This post was written by : hoshika
16

எகிப்தில் சிக்கன நடவடிக்கைகளை அமுல்படுத்தற்கான நியாயப்படுத்தல்கள் குறித்து பிரதமர் ஷெரீஃப் இஸ்மாயில் கருத்து வெளியிட்டுள்ளார்.

நாட்டின் நாணயப் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளமை மற்றும் எரிபொருள் விலை அதிகரிப்பு ஆகியவை ஏற்பட்ட அடுத்த நாளே, தலைநகர் கெய்ரோவில் சிக்கன நடவடிக்கை அமுல்படுத்தல்கள் குறித்த கருத்தை அவர் வெளியிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர், அரசாங்கம் பணத்தை திரட்ட முயற்சி செய்து வருவதாகவும், பொருளாதார சீர்திருத்தங்களை தள்ளிப்போட முடியாது என்றும் தெரிவித்தார்.

இதேவேளை நேற்று முன்தினம் (வியாழக் கிழமை) எகிப்து மத்திய வங்கி, நாட்டின் நாணயமான பவுண்டின் மதிப்பை 48 சதவீத அளவிற்குக் குறைத்தது. அத்தோடு, எரிபொருள் மானியங்கள் நிறுத்தப்பட்டன மற்றும் பெட்ரோல் விலை 30 முதல் 46 சதவீதத்திற்கு இடையே அதிகரித்தது.

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 12 மில்லியன் டாலர் கடனை பெறுவதற்கான நடவடிக்கைகளில் ஒரு பகுதியாக இது பார்க்கப்படுகிறது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg