Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

கூட்டு போர் பயிற்சிகளில் எகிப்திய – ஜோர்தானிய படையினர்

In உலகம்
Updated: 09:14 GMT, Nov 6, 2016 | Published: 06:45 GMT, Nov 6, 2016 |
0 Comments
1269
icon_com
This post was written by : hoshika
9

இருதரப்பு இராணுவ ஒத்துழைப்பை விரிவுபடுத்தும் விதமாக எகிப்திய மற்றும் ஜோர்தானிய படையினர், தென்மெற்கு ஜோர்தானின் துறைமுக நகரான அகாபாவில் போர் பயிற்சிகளை ஆரம்பித்துள்ளன.

நேற்று (சனிக் கிழமை) ஆரம்பமான Aqaba  2016 எனப் பெயரிடப்பட்ட இந்த போர் பயிற்சிகள், 20 நாட்களுக்கு தொடர்ந்து நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பயிற்சி நடவடிக்கைகளில் இரு நாட்டு கடற்படை, இராணுவம் மற்றும் விமானப் படை ஆகியவற்றோடு, சிறப்புப் படையினரும் பங்கெடுத்துள்ளனர்.

இநந்நிலையில் ஆயுதப் பயிற்சிகள் ஜோர்தானின் ஆயுதப் படைகள்/ அரபு இராணுவ தளத்தில் இடம்பெற்று வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

பிராந்தியத்தின் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை சமாளித்தல் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்தழைப்பு செயற்பாடுகளை அதிகரிக்கும் விதமாகவே இந்த பயிற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg