Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

எதியோப்பியாவில் இராஜதந்திரிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த பயணதடை நீக்கம்

In
Updated: 11:00 GMT, Nov 10, 2016 | Published: 11:00 GMT, Nov 10, 2016 |
0 Comments
1521
This post was written by : hoshika

எதியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபாவில் இருந்து 40 கிலோமீற்றருக்கு மேற்பட்ட தூரத்திற்கு இராஜதந்திரிகள் பயணம் செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை, அரசாங்கம் நீக்கியுள்ளதாக அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த தடையானது கடந்த மாதம், நாட்டில் அவசரகால நிலையோடு சேர்த்து அமுல்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள பாதுகாப்ப அமைச்சர் சிராஜ் ஃபகீஸ்ஸா, நாட்டில் தற்போது சமாதானம் மற்றும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளமையினால் இத்தடை நீக்கப்படுவதாகக் குறிப்பிட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எதியோப்பியாவில் அண்மையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகளவில் வன்முறைகள் இடம்பெற்றிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg