Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பணத்தாள்கள் விவகாரத்தில் விவசாயிகள் பேரிடரை எதிர்கொண்டுள்ளனர்: அகிலேஷ் யாதவ்

In இந்தியா
Updated: 07:28 GMT, Nov 19, 2016 | Published: 07:28 GMT, Nov 19, 2016 |
0 Comments
1129
This post was written by : Shailu

ரூ500 மற்றும் ரூ1000 பணத்தாள்கள் விவகாரத்தில் விவசாயிகள் ஒரு பேரிடர் சூழலை எதிர்கொண்டு வருவதாக உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

ரூ.500, ரூ1000 பணத்தாள்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டதையடுத்து கரும்புகளுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்துவது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசிப்பதற்காக உத்தரப் பிரதேச மாநில அமைச்சரவைக் கூட்டம் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்குப் பின்னர் அங்கிருந்த செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில்,

அதிக மதிப்பிலான பணத்தாள்கள் செல்லாது என்ற அறிவிப்பானது முன்யோசனையின்றி மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாகும்.

இதனால் பெரும் பணக்காரர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை. நாட்டில் உள்ள ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர்தான் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

போதிய அளவு பருவமழை பெய்யாதது, வெள்ளம் ஆகிய இயற்கைப் பேரிடர்களால் உத்தரப் பிரதேசத்தில் விவசாயிகள் கடந்த ஆண்டு வரை பெரும் நஷ்டத்தை சந்தித்து வந்தனர்.

இந்த ஆண்டிலாவது அந்த நஷ்டத்தை சரிசெய்து விடலாம் என அவர்கள் எண்ணியிருந்தனர். ஆனால், மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் மற்றொரு பேரிடரை விவசாயிகள் சந்தித்து வருகின்றனர்.

இந்தப் பேரிடரை மத்திய அரசு வேண்டுமென்றே மக்கள் மீது திணித்துள்ளது. எந்தவித முன்னேற்பாடும் இல்லாமல் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டிருப்பதால் மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

இந்த அசாதாரண சூழலிலிருந்து விவசாயிகளைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது. எனவே, பழைய ரூ.500, ரூ.1000 பணத்தாள்களை பணப் பரிவர்த்தனைகளுக்குப் பயன்படுத்த விவசாயிகளுக்கு மட்டுமாவது மத்திய அரசு அனுமதியளிக்க வேண்டும்’ என்று அவர் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg