Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உத்தரப்பிரதேச ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண உதவி

In இந்தியா
Updated: 11:34 GMT, Nov 20, 2016 | Published: 11:34 GMT, Nov 20, 2016 |
0 Comments
1244
This post was written by : Shailu

உத்தரப்பிரதேச மாநில ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்கப்படும் என உத்தரப் பிரதேச மாநில அரசு அறிவித்துள்ளது.

மேலும் படுகாயம் அடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என்றும் மீட்பு பணிகளை துரிதப்படுத்தவும் உத்தரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் உத்தரவிட்டுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் பாட்னா – இந்தூர் கடுகதி ரயில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

சுமார் 14 பெட்டிகள் தடம் புரண்ட இந்த ரயில் விபத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 100 -ஆக உயர்ந்துள்ள நிலையில் பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இதையடுத்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்கப்படும் என உத்தரப் பிரதேச மாநில அரசு அறிவித்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg