Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

காபூலில் தற்கொலைத் தாக்குதல் 27 பேர் உயிரிழப்பு

In உலகம்
Updated: 14:28 GMT, Nov 21, 2016 | Published: 14:09 GMT, Nov 21, 2016 |
0 Comments
1388
icon_com
This post was written by : elayathambi
kabul

ஆப்கான் தலை நகர் காபூலில் இன்று மேற்கொள்ளப்பட்ட  தற்கொலைத் தாக்குதலில் 27 பேர் கொல்லப்பட்டுள்ளனர். காபூலில் உள்ள ஷியா பள்ளிவாசலில் நடத்தப்பட்ட இத் தாக்குதலில் மேலும் 35 பேர் படுகாயங்களுக்கு இலக்காகி உள்ளதாக அரச அதிகாரிகள் தெரிவித்துள்லனர்.

இன்று திங்கட்கிழமை காபூலில் நடத்தப்பட்ட இரண்டாவது தாக்குதல் இதுவாகும். இன்று காலை இடம்பெற்ற முதலாவது குண்டுத் தாக்குதலில் ஆப்கான் தேசிய இராணுவ வீரர்கள் இருவர் கொல்லப்பட்டுள்ளனர்.

ஃபஹ்ஹீர் உல் ஒலும் என்ற ஷியா பள்ளிவாசலில் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 27 பேர் கொல்லப்பட்டிருப்பதாக ஆப்கான் உள்துறை அமைச்சு செய்தி வெளியிட்டுள்ளது. இத்தகைய தாக்குதல்களை தலிபான்களே மேற்கொள்வதாக ஆப்கான் குற்றம் சுமத்துவது வழமையானது.

அதேவேளை பள்ளிவாசல்கள் மீது தாக்குதல்கள் எதையும் தாம் திட்டமிடுவதில்லை என தலிபான் அமைப்புனர் தெரிவித்துள்ளனர். குறித்த பள்ளிவாசல் மீதான  தாக்குதலுக்கு எந்த அமைப்பும் உரிமை கோரவில்லை.

photos courtesy  AFP

suicide-bomber-1

suicide-bomber-2

suicide-bomber-4

suicide-bomber-3

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg