Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரித்தானியர்கள் விரும்பினால் பிரெக்சிற் தீர்மானத்தை மாற்றியமைக்கலாம் : டோனி பிளெயார்

In
Updated: 06:47 GMT, Nov 26, 2016 | Published: 06:47 GMT, Nov 26, 2016 |
0 Comments
1353
This post was written by : Sylviya

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவதை பிரித்தானிய மக்கள் நினைத்தால் தடுத்து நிறுத்த முடியும் என, பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டோனி பிளெயார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் பிளெயார் கருத்து தெரிவித்த போது, “பிரெக்சிற்றின் விளைவுகளை உணர்ந்திருந்தால், பிரித்தானியர்கள் அதனை தடுத்து நிறுத்த முடியும்” என தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய பிரதமர் தெரேசா மேயினால் பரிந்துரைக்கப்பட்டுள்ள திட்டங்கள் தற்போது உள்ள நிலைமையை மேலும் இக்கட்டான நிலைக்கு தள்ளும் என்பதை உணர்ந்து கொள்ளும் பட்சத்தில், பிரெக்சிற் தொடர்பான தீர்மானத்தை பிரித்தானிய நாடாளுமன்றம் மற்றும் பிரித்தானிய மக்கள் மாற்றியமைக்கலாம் என பிளெயார் குறிப்பிட்டுள்ளார்.

பிரித்தானிய எல்லைக் கட்டுப்பாட்டை மீளப் பெறும் வகையிலும் மேம்படுத்தப்பட்ட பொருளாதார சுதந்திரத்தை பேணும் வகையிலும், கடந்த ஜூன் மாதம் 23 ஆம் திகதி நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில், ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரித்தானியா விலக வேண்டும் எனும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

ஐரோப்பிய ஒன்றிய கருத்துக் கணிப்பு ஒரு பேரழிவு எனவும், அதனால் இரண்டாவது கருத்துக் கணிப்பு ஒன்று நடத்தப்பட வேண்டும் எனவும் முன்னதாக பிளெயார் தெரிவித்திருந்தமை நினைவுகூறத்தக்கது.

பிளெயாரின் கருத்துக்கள் பிரதமர் தேரேசா மேயின் கருத்துக்களுடன் முற்றிலும் மாறுபட்டுள்ள நிலையில், ‘பிரெக்சிற்றின் விளைவுகள் பற்றி தெரியாமலேயே மக்கள் பிரெக்சிற் தீர்மானத்தை மேற்கொண்டிருந்தனர். ஆனால், தற்போது பிரெக்சிற்றின் விளைவுகள் குறித்து மக்கள் நன்கறிந்திருப்பார்கள்’ என தெரிவித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg