Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரெக்சிற் நிலைமைகள் தொடர்பில் மார்ட்டின் கருத்து

In
Updated: 15:52 GMT, Nov 28, 2016 | Published: 10:11 GMT, Nov 28, 2016 |
0 Comments
1323
This post was written by : Sylviya

பிரெக்சிற்றிற்கு பின்னரான வடக்கு அயர்லாந்தின் நிலைமைகள் குறித்து, ஐரோப்பிய ஒன்றியத்திடம் பிரித்தானியா உதவிகோர வேண்டும் எனவும், அதற்கு ஐரோப்பிய ஒன்றியம் உதவ வேண்டும் எனவும் அயர்லாந்துக் குடியரசின் எதிர்கட்சித் தலைவர் மார்ட்டின் (Micheál Martin) தெரிவித்துள்ளார்.

நவீன ஐரோப்பிய ஜனநாயகத்தினால் மேற்கொள்ளப்பட்ட பாரிய தவறே பிரெக்சிற் என, இவ்விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த மார்ட்டின் தெரிவித்துள்ளார்.

பிரெக்சிற்றினால் தற்போது அயர்லாந்து பேராபத்தில் சிக்கியுள்ளதாகவும், அதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவி தேவை எனவும் மார்ட்டின் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போதைய காலகட்டம் தொடக்கம் 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையான காலப்பகுதிக்குள் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள், பல தசாப்தங்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் என, மாரட்டின் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg