Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வசையாடிய பென் ஸ்டோக்ஸ்க்கு ஐ.சி.சி. எச்சரிக்கை!

In கிாிக்கட்
Updated: 06:19 GMT, Nov 27, 2016 | Published: 06:19 GMT, Nov 27, 2016 |
0 Comments
1262
This post was written by : Anojkiyan

இந்தியா அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், இந்திய வீரர்களை தகாத வார்த்தைகளை வசையாடிய இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட வீரர் பென் ஸ்டோக்ஸ்க்கு ஐ.சி.சி. எச்சரிக்கை விடுத்துள்ளது.

மொஹாலியில் நடைபெற்ற இப்போட்டியில், இங்கிலாந்து அணி விக்கெட்டுக்களை இழந்து திணறியபோது பென் ஸ்டோக்ஸ் அணியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். ஆனால், 29 ஒட்டத்தில் ஜடேஜா பந்தில் ஸ்டம்பிங் முறையில் ஆட்டமிழந்தார்.

இதனால், ஆத்திரமடைந்த அவர், இந்திய வீரர்களை திட்டிக்கொண்டே பெவிலியம் சென்றார். இதை மைதான நடுவர்களான மரைஸ் எராஸ்மஸ் மற்றும் கிறிஸ் கஃபானெய் கவனித்தார்கள். அவர்கள் இந்த பிரச்சினையை போட்டி நடுவரான ரஞ்சன் மதுகலேயிடம் கொண்டு சென்றனர்.

விசாரணையில் பென் ஸ்டோக்ஸ் வீரர்களின் நன்னடத்தை விதி 2.1.4.-ஐ மீறியதாக தெரியவந்தது. அவரது குற்றம் 1வது கட்த்துக்குள்ளானது என்பதால் கண்டிப்புடன், பணிநீக்கத்துக்கான ஒரு புள்ளி வழங்க ஐ.சி.சி. முடிவு செய்தது. இதற்கு பென் ஸ்டோக்ஸ் ஒப்புக்கொண்டதால் மேற்கொண்டு விசாரணை இல்லாமல் கண்டிப்புடன் பென் ஸ்டோக்ஸ் விடுவிக்கப்பட்டார்.

இன்னும் 24 மாதத்திற்குள் மேலும் நான்கு புள்ளிகள் பெற்றால் ஒரு டெஸ்ட் அல்லது இரண்டு ஒருநாள் அல்லது இரண்டு ரிருவென்ரி போட்டி இதில் எது முதலில் வருகிறதோ அதில் விளையாட தடை விதிக்கப்படும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg