Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தென்கொரிய ஜனாதிபதிக்கு எதிராக அணிதிரளும் மக்கள்: வரலாறு காணாத போராட்டம்

In
Updated: 06:25 GMT, Nov 27, 2016 | Published: 06:25 GMT, Nov 27, 2016 |
0 Comments
1253
This post was written by : Sambavi

கடந்த தசாப்தங்களில் இல்லாத அளவிற்கு தென்கொரியாவில் ஜனாதிபதிக்கு எதிராக வலுத்துவரும் போராட்டத்தில் பங்கேற்கும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்றது.

நேற்று (சனிக்கிழமை) தலைநகர் சியோலில் சுமார் 15 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் ஒன்றினைந்து ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்திருந்ததாகவும் அவர்கள் ஜனாதிபதி பார்க் ஹியூன் – ஹையை பதவிவிலக வேண்டும் என்று கோரியுமே குறித்த ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.

இதேவேளை, நேற்று முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் வரலாறு காணாத அளவிற்கு மக்கள் பங்கேற்றமை ஜனாதிபதிக்கு எதிராக அதிகரித்துவிட்ட எதிர்பலைகளை காட்டுவதாக சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

1987 ஆம் ஆண்டு அந்நாட்டில் நிலவிய இராணுவ சர்வதிகாரத்திற்கு எதிராக சுமார் 1 மில்லியன் வரையான மக்கள் பங்கேற்ற நிலையில் அதன் பின்னராக மக்களின் மாபெரும் எழுச்சியாக நேற்றைய போராட்டம் பார்க்கப்படுகின்றது.

மெழுவர்த்தி ஏந்தி அமைதியான போராட்டங்களாகன உருவெடுத்த ஜனாதிபதி பார்கிற்கு எதிரான போராட்டம் தற்போது மக்கள் எழுச்சி என்று கூறும் அளவிற்கு விஸ்தீரணப்படுத்தப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள ஊடகங்கள், நேற்றைய போராட்டமும் அமைதியான முறையில் எதுவித குழப்பங்களும் இனறி முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளன.

எவ்வாறான போதும், ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள ஜனாதிபதிக்கு எதிர்வரும் 2018ஆம் ஆண்டு வரை பதவிக்காலம் உள்ள போதிலும் அவர் மீதான மக்களின் வெறுப்பு அதிகமாகும் பட்சத்தில் அவர் பதவி விலக நேரிடும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg