Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள போராட்டங்களில் வி.சி.க பங்கேற்கும்: திருமாவளவன்

In இந்தியா
Updated: 08:01 GMT, Nov 27, 2016 | Published: 06:28 GMT, Nov 27, 2016 |
0 Comments
1166
This post was written by : Shailu

தமிழ்நாட்டில் எதிர்வரும் 28ஆம் திகதி நடைபெறவுள்ள அனைத்துவிதமான போராட்டங்களிலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் பங்கேற்கும் என அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

‘500, 1,000 பணத்தாள்கள் செல்லாது என சட்டவிரோதமான முறையில் அறிவிப்புச்செய்து மோடி அரசு இந்தியாவில் ஒரு பொருளாதார அவசரநிலையைப் பிறப்பித்திருக்கிறது.

மோடி அரசின் இந்த சர்வாதிகார நடவடிக்கையால் ஏழை மக்கள் சொல்லமுடியாத இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர்.

இதை உணர்ந்துதான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகள் எதிர்வரும் நவம்பர் 28ஆம் திகதியை ‘தேசிய எதிர்ப்பு நாள்’ஆக அறிவித்திருக்கின்றன.

அதை ஆதரித்து குறித்த போராட்டத்தை வெற்றி பெறச்செய்ய வேண்டியது நமது கடமையாகும். எனவே, அந்தப் போராட்டத்துக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்நாட்டில் இடதுசாரிக் கட்சிகள் ஒருங்கிணைத்து நடத்தவுள்ள அனைத்துவிதமான போராட்டங்களிலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் பங்கேற்கும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்’ என அவர் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg