Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அகதிகள் தொடர்பான நிலைப்பாட்டை மாற்றக்கோரி ஒஸ்ரிய மக்கள் ஆர்ப்பாட்டம்

In
Updated: 07:37 GMT, Nov 27, 2016 | Published: 07:32 GMT, Nov 27, 2016 |
0 Comments
1210
This post was written by : Sambavi

அகதிகள் தொடர்பான ஜனாதிபதித் தேர்தல் கொள்கைகள் குறித்து எதிர்ப்புத் தெரிவித்து ஒஸ்ரியாவில் அகதிகள் மற்றும் ஒஸ்ரிய மக்கள் இணைந்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர்.

ஒஸ்ரிய தலைநகர் வியன்னாவில் நேற்று (சனிக்கிழமை) ஒன்றுதிரண்ட மக்கள், அகதிகளை நாடுகடத்தல், ஐரோப்பிய நாடுகளுக்குள் ஒன்றில் இருந்து மற்றொரு நாட்டுக்கு அனுப்பிவைத்தல் மற்றும் ஐரோப்பிய நாடுகளை விட்டு வெளியேற்றல் போன்ற விடயங்களிற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.

ஆசிய மற்றும் ஆபிரிக்க நாடுகளில் இருந்து யுத்தம் மற்றும் வறுமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக ஐரோப்பிய நாடுகளுக்கு தஞ்சம் கோரி வரும் அகதிகளுக்கு அங்கு வாழ்வதற்கான சர்வதேச அங்கிகாரம் பெற்றுத்தரப்பட வேண்டும் என கோரி அம்மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இது தொடர்பில் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டுள்ள ஒருவர் தெரிவிக்கையில், ‘அரசாங்கம் தஞ்சம் கோரி வந்துள்ள அகதிகளை இடமாற்றுவதையோ அல்லது வெளியேற்றுவதையோ நிறுத்தவேண்டும். அகதிகளாக வருபவர்களுக்கு உரிமை உள்ளது. அதேவேளை அவர்களை இங்கு தங்கவைக்கும் சூழ்நிலையும் உள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அகதிகளை உள்ளீர்பபது தொடர்பான எதிரான நிலைப்பாட்டைக் கொண்டோரும் நேற்று ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg