Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஹைதராபாத்தில் போலி நாணயத்தாள்களை அச்சடித்த குற்றச்சாட்டில் 6 பேர் கைது

In இந்தியா
Published: 07:14 GMT, Nov 27, 2016 |
0 Comments
1222
This post was written by : Shailu

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் புதிய 2,000 ரூபாய் போலி நாணயத்தாள்களை அச்சடித்த குற்றச்சாட்டில் நேற்று (சனிக்கிழமை) 6 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹைதரபாத்தில் சிலர் போலி நாணயத்தாள்களை அச்சடிப்பதாக பொலிஸாருக்கு இரகசிய தகவல் ஒன்று கிடைக்கப்பெற்றதைத் தொடர்ந்து காவல்துறையினர் அங்கிருந்த ஒரு வீட்டைச் சுற்றி வளைத்தனர்.

இதன்போது, அங்கு பல போலி நாணயத்தாள்கள் கைப்பற்றப்பட்டதோடு, சம்பவத்தில் தொடர்புடைய ஆறு பேரை  பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதனையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்த கிழக்கு சைபராபாத் பொலிஸ் ஆணையாளர் மகேஷ் பகவத்,

‘ராஜ்குண்டா விசேட பொலிஸ் பணியாளர்கள் குழுவின் உதவியுடன் குறித்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

8பேர் கொண்ட கும்பலில் 6பேர் கைது செய்யப்பட்ட நிலையில், 2பேர் தப்பி சென்றுள்ள நிலையில், அவர்களை தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றது.

இவர்களிடம் 2 லட்சத்து 22 ஆயிரம் போலி நாணயத்தாள்களும் ரூ100, ரூ50 உள்ளிட்ட சில ரூபாய் தாள்கள் காணப்பட்டது.

மேலும், போலி நாணயத்தாள்களைத் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட இயந்திரம் மற்றும் இதர பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டது.’ என்று அவர் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg