Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மத்திய அரசின் திட்டம் புரட்சிக்கரமான திட்டம் என்கிறார் கிரண்பேடி

In இந்தியா
Updated: 07:33 GMT, Nov 27, 2016 | Published: 07:33 GMT, Nov 27, 2016 |
0 Comments
1160
This post was written by : Shailu
kiran-bedi

மத்திய அரசின் திட்டம் மிகவும் புரட்சிக்கரமான திட்டம் என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்தோடு, மத்திய அரசின் திட்டத்தால், கறுப்பு பணம், ஊழல் பணம், தீவிரவாதத்திற்காக செலவிடப்படும் பணம் வேரோடு அகற்றப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது புரட்சியை உண்டாக்கும் திட்டம் என்று குறிப்பிட்ட அவர், ஏழை மக்கள் இந்த திட்டத்தால் முன்னேறுவார்கள் என்று தெரித்ததோடு, இந்தியாவின் பொருளாதாரம் விரைவில் உயரும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும் நாளை (திங்கட்கிழமை) புதுச்சேரியில் காங்கிரஸ் அறிவித்துள்ள போராட்டத்தினால் சட்டம் – ஒழுங்கு பாதிக்காத வண்ணம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg