Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பணத்தாள்கள் விவகாரத்தால் சாதாரண மக்கள் அதிகளவு பாதிப்பு: சீதாராம் யெச்சூரி

In இந்தியா
Updated: 08:01 GMT, Nov 27, 2016 | Published: 08:00 GMT, Nov 27, 2016 |
0 Comments
1270
This post was written by : Shailu

பணத்தாள்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டதால் ஏழைகள், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.

இது குறித்து பெங்களூரு பத்திரிகையாளர் சங்கத்தில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற செய்தியாளர்களின் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர்,

“கறுப்புப் பணம், ஊழல், பயங்கரவாதிகள் நிதி சேர்ப்பு, ஆகியவற்றுக்கு முடிவுக் கட்டுவதற்காகக் கூறி, ரூ.500, ரூ.1,000 பணத்தாள்களைச் செல்லாததாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.

ஆனால், இந்த அறிவிப்பால் ஏழைகள், விவசாயிகள், தொழிலாளர்கள் உள்ளிட்ட அடித்தட்டு மற்றும் நடுத்தர மக்கள்தான் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

பிரதமர் மோடியின் நடவடிக்கையால் பெரும் பணக்காரர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட உயர் வருவாய் வர்க்கத்தினர் பாதிக்கப்பட்டதாகத் தெரியவில்லை.

முன்யோசனையின்றி அறிவிப்பு விடுக்கப்பட்டதால், நாடு முழுவதும் கொந்தளிப்பான சூழல் காணப்படுகிறது.

பிரதமர் மோடியின் ரூபாய் நோட்டு தடை உத்தரவைக் கண்டித்து, எதிர்வரும் 28-ஆம் திகதி நாடு தழுவிய போராட்டத்துக்கு எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன. இதற்கு அனைத்து தரப்பு மக்களும் ஆதரவளிக்க வேண்டும்’ என்று அவர் தெரிவித்தள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg