Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மாவீரர் நிகழ்வுக்கு மண்டபம் தரமாட்டோம் என தெரிவிப்பு

In இலங்கை
Published: 07:47 GMT, Nov 27, 2016 |
0 Comments
1190
This post was written by : Varshini
maveerar

தமிழர் தாயக பிரதேசத்தில் மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில், வவுனியா பிரஜைகள் குழு மாவீரர் நாளை அனுஷ்டிக்க வவுனியாவிலுள்ள மண்டபங்களின் உரிமையாளர்களிடம் கோரிக்கை விடுத்தபோதிலும் அதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா நகரசபை மண்டபத்தை வழங்குவதற்கு நகரசபை செயலாளர் மறுப்பு தெரிவித்துள்ளதோடு, அதனையடுத்து வவுனியா சுத்தானந்தா இந்து இளைஞர் மண்டபம், முத்தையா மண்டபம், சிந்தாமணி பிள்ளையார் ஆலய கலாசார மண்டபம் என்பவற்றை ஏற்பாட்டுக் குழு அணுகிய போதும் அவற்றை வழங்கவும் மண்டப உரிமையாளர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

இவற்றுள் சில மண்டபங்களுக்கு பொறுப்பாகவுள்ளவர்கள் எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், அவர்களே மண்டபங்களை வழங்க மறுத்துள்ளமை மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg