Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இரவு நேர வீதி விபத்தில் இருவர் படுகாயம்

In இலங்கை
Updated: 08:03 GMT, Nov 27, 2016 | Published: 08:03 GMT, Nov 27, 2016 |
0 Comments
1252
This post was written by : hoshika

மட்டக்களப்பு – காத்தான்குடி பிரதான வீதி, ஹிஸ்புல்லாஹ் மண்டபத்திற்கு முன்பாக நேற்று (சனிக்கிழமை) இரவு 9 மணியளவில் இடம்பெற்ற வீதி விபத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தின் போது, காத்தான்குடியிலுள்ள பள்ளிவாயல் ஒன்றில் காவலாளியாகக் கடமை புரியும் 70 வயது எம். நூர் முஹம்மத் மற்றும் பாதணி தொழிற்சாலையில் பணிபுரியும் 20 வயது எம். முஹம்மத் சஹ்தி ஆகியோர்  காயமடைந்துள்ளனர்.

வீதியைக் கடக்க முற்பட்ட வயோதிபர் மீது இளைஞன் செலுத்திச் சென்ற மோட்டார் சைக்கிள் மோதுண்டதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதில் காயமடைந்த இருவரும் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg