Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அணு உலைகள் அவசியமா? – வாக்கெடுப்பில் சுவிஸ் மக்கள்

In ஐரோப்பா
Updated: 08:20 GMT, Nov 27, 2016 | Published: 08:20 GMT, Nov 27, 2016 |
0 Comments
1462
This post was written by : Sambavi

சுவிஸ்சர்லாந்தில் அணுமின் உலைகள் தயார்படுத்தல் நடவடிக்கைகளில் வேகமான செயற்பாடுகள் அவசியமா இல்லையா என்பது தொடர்பில் தீர்மானத்தை எட்டும் பொருட்டு அந்நாட்டு மக்கள் வாக்களித்து வருகின்றனர்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றுவரும் வாக்களிப்பில் மக்கள் ‘ஆம்’ என்பதை தெரிவு செய்தால் மூன்று நாடுகள் இணைந்து மேற்கொண்டுள்ள 5 அணு உலைகளில் மூன்றினை அடுத்த ஆண்டு மூடுவதற்கும் எதிர்வரும் 2029ஆம் ஆண்டு மீதமுள்ள இரண்டு உலைகளை மூடுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

குறித்த 5 அணு உலைகளும் சுவிஸ்சலாந்திற்கான மின்சக்தியில் 40 சதவீதத்தினை பூர்த்தி செய்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

சுற்றுச்சூழல் தொடர்பில் இறுக்கமான சூழ்நிலைக்கு குறித்த அணு உலைகள் இட்டுச்சென்றுள்ள நிலையில், இன்றைய மக்களின் முடிவு தீர்க்கமான இறுதித் தீர்மானத்தினை எட்டுவதற்கு வழி செய்யும் என்று நம்பப்படுகின்றது.

அந்நாட்டின் பசுமைக்கட்சி மற்றும் சமூக ஜனநாயகக் கட்சி ஆகியன ஜப்பானில் கடந்த 2011ஆம் ஆண்டு ஏற்பட்ட ஃபியுஷிமா அணு உலை விபத்திற்கு பின்னர் குறித்த விடயத்தினை வாக்கெடுப்பிற்கு விடவேண்டும் என அழுத்தம் கொடுத்து வந்தன.

இந்த நிலையிலேயே இன்று குறித்த வாக்கெடுப்புத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், எவ்வாறான போதும் ஆம் மற்றும் இல்லை என்ற இரண்டு தெரிவுகளுமே மிக கடுமையான போட்டியொன்றினை கொண்டுள்ளதாகவும் கணிப்பீட்டுகள் தெரிவிக்கின்றன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg