Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

‘இருளில் இருந்து வெளிச்சத்திற்கு…’ – வவுனியாவில் நடமாடும் சேவை

In இலங்கை
Updated: 09:07 GMT, Nov 27, 2016 | Published: 09:07 GMT, Nov 27, 2016 |
0 Comments
1311
This post was written by : Varshini

வவுனியா மாவட்டத்தினை 100 வீதம் மின்சார தேவை நிறைவடைந்த மாவட்டமாக மாற்றும் வகையிலான நடமாடும் சேவையொன்று, இன்று (ஞாயிற்றுக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது.

மின்சக்தி மற்றும் புத்தாக்க சக்தி அமைச்சின் ஊடாக வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் இடம்பெற்ற இந் நடமாடும் சேவையானது, வவுனியா மாவட்டத்தினை நூறு வீதம் மின் வழங்கல் சேவைக்குள் உள்வாங்கும் பொருட்டு ‘இருளில் இருந்து வெளிச்சத்திற்கு’ எனும் தொனிப்பெருளில் இடம்பெற்றது.

இதன்போது மின்சக்தி மற்றும் புத்தாக்க சக்தி அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய, அமைச்சின் செயலாளர் கலாநிதி பட்டகொட மற்றும் மின்சார சபையின் உயரதிகாரிகள், அமைச்சின் அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

இந் நடமாடும் சேவையில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு மின்சாரம் தொடர்பான தமது பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொண்டனர். இந் நடமாடும் சேவையில் மின்சார உபகரணங்கள் மற்றும் சூரிய சக்தி மின்கலங்கள் தொடர்பான விற்பனை கூடங்களும் அமைக்கப்பட்டிருந்தன.

வவுனியா உள்ளிட்ட தமிழ்ப் பிரதேசங்களில் இன்று மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில், வவுனியாவுக்கு ஒளிகொடுப்பதற்காக இந் நடமாடும் சேவை இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

vavuniya-mobile-service-for-electricity-5 vavuniya-mobile-service-for-electricity-6 vavuniya-mobile-service-for-electricity-8 vavuniya-mobile-service-for-electricity-3 vavuniya-mobile-service-for-electricity-2 vavuniya-mobile-service-for-electricity-1

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg