Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

டூபிளஸின் மேல்முறையீடை ஏற்க முடியாது: ஐ.சி.சி. தலைவர் டேவிட்

In கிாிக்கட்
Published: 10:20 GMT, Nov 27, 2016 |
0 Comments
1219
This post was written by : Anojkiyan
davidrichardson

ஹோபர்ட்டில் நடந்த அவுஸ்திரேலிய அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது, பந்தை சேதப்படுத்தியதாக குற்றச்சாட்டப்பட்ட தென்னாபிரிக்க அணியின் தலைவர் டூபிளஸின் மேல்முறையீடை ஏற்க முடியாது என ஐ.சி.சி., தலைவர் டேவிட் ரிச்சர்ட்சன் தெரிவித்துள்ளார்.

தனது குற்றத்தை மறுத்து மேல்முறையீடு செய்துள்ள டூபிளஸிஸ்க்கு தென்னாபிரிக்கா கிரிக்கெட் வாரியம் ஆதரவு தெரிவித்துள்ளது. இருப்பினும் இதனை ஏற்க மறுத்துள்ள ரிச்சர்ட்சன் கூறுகையில்,

பந்தை ‘சன் கிரீம்’ மற்றும் ‘லிப் ஐஸ்’ உள்ளிட்ட பொருளால் செயற்கையான முறையில் பளபளப்பாக்க கூடாது. கடந்த 2004ஆம் ஆண்டு இந்திய வீரர் ராகுல் டிராவிட், சிம்பாப்வே அணிக்கெதிரான போட்டியில், ‘சுவிங்கத்தை’ மென்று அதன் உமிழ்நீரை பந்தில் தேய்த்ததால் அபராதம் விதிக்கப்பட்டது.

இதுதான், டூபிளஸிஸ் விவகாரத்திலும் நடந்தது. இதை எப்போதும் ஏற்க முடியாது. இதற்கான விதிமுறையில் மாற்றம் செய்யவும் வாய்ப்புள்ளது. என கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg