Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரித்தானிய வெளியுறவு செயலாளர் ஆப்கான் விஜயம்

In
Updated: 15:38 GMT, Nov 28, 2016 | Published: 09:58 GMT, Nov 28, 2016 |
0 Comments
1264
This post was written by : Sylviya

ஆப்கானில் உயிரிழந்த பிரித்தானியர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், பிரித்தானிய வெளியுறவு செயலாளர் போரிஸ் ஜொன்சன் நேற்று (சனிக்கிழமை) மலர்வளையங்களை அர்ப்பணித்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.

அவர் ஆப்கானிஸ்தான் மற்றும் பிரித்தானியாவுக்கு உள்ள இருதரப்பு உறவுகளை வலுவடைய செய்யும் வகையில் ஆப்கானிஸ்தானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த போதே குறித்த அஞ்சலி நிகழ்வில் கலந்துகொண்டுள்ளார்.

ஆப்கானிஸ்தானில் சுமார் 450 பிரித்தானிய படைவீரர்களின் உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த அஞ்சலி நிகழ்வுகளை தொடர்ந்து, போரிஸ் ஜொன்சன் காபூலில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனைத் தொடர்ந்து, ஆப்கானின் இராணுவ உயர் கல்விக்கூடத்திற்கும் போரிஸ் ஜொன்சன் விஜயம் மேற்கொண்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அங்கு அவர் நேட்டோ மற்றும் ஆப்கான் அதிகாரிகளை சந்தித்து உரையாடியதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.

குறித்த ஆப்கானிஸ்தான் விஜயத்தின் போது, அவர் ஆப்கான் ஜனாதிபதி அஷ்ரப் கானி (Ashraf Ghani) மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி அப்துல்லா (Abdullah Abdullah) ஆகியோரையும் சந்தித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg