Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வடக்கின் மின்சார பிரச்சினை தீர்க்கப்படும்: துறைசார் அமைச்சர் உறுதி

In இலங்கை
Updated: 09:38 GMT, Nov 28, 2016 | Published: 09:42 GMT, Nov 27, 2016 |
0 Comments
1359
This post was written by : Varshini

வடக்கு மாணவர்களின் கல்வியை மேம்படுத்த சகல வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்படுமென தெரிவித்துள்ள அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய, அந்தவகையில் வடக்கின் மின்சார தேவையை பூரணமாக நிறைவேற்றுவதற்கு தேவையான சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுமென மேலும் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற மின்சக்தி அமைச்சின் நடமாடும் சேவையொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் இவ்விடயத்தைத் தெரிவித்தார். அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்-

”எமது அமைச்சின் ஊடாக நடைபெறுகின்ற நடமாடும் சேவையின் ஊடாக சுமார் 23,600க்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் சுமார் 4000 பேர் வட மாகாணத்தில் இருக்கின்றனர். வவுனியா பிரதேசத்தை பொறுத்தவரையில் 500இற்கும் குறைவாகவே விண்ணப்பதாரிகள் இருக்கின்றனர்.

மின்சாரத்தை பெறுவதில் சிக்கல் நிலை மற்றும் விண்ணப்பிப்பதில் தாமதம் போன்ற பிரச்சினைகள் காணப்பட்டன. இவற்றை வென்று மின்சாரத்தை இலகுவாக பெற்றுக்கொள்வதற்கு, மின்சாரசபை மற்றும் அமைச்சு இணைந்து இந்த நடமாடும் சேவையை செய்து வருகின்றது.

அத்தோடு, சூரிய சக்தி ஊடாக இந்த பிரதேசங்களில் உள்ள வீடுகளின் கூரைகளிலே உள்ள தளங்களில் கலங்கள் பொருத்தப்படும் திட்டமும் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

குப்பி விளக்கிலே படிக்கின்ற மாணவர்களின் கல்வியை மேம்படுத்துவதற்கு, இப் பிரதேசத்தில் வீட்டுக்கு வீடு மின்சாரம் பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கை பூர்த்திசெய்யப்பட்டுள்ளது. வட மாகாணத்திலுள்ள மாணவர்கள் கல்வியை பெற்றுக்கொள்வதற்கான சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். அந்தவகையில் எதிர்வரும் ஜனவரி மாதம் 8ஆம் திகதியுடன் இப்பிரதேசத்திற்கான மின்சாரம், மின் பாவனை தொடர்பான அனைத்து பிரச்சினைகளும் நிவர்த்திக்கப்படும்” என்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg