Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அம்பாறையில் தொழில் வெற்றிடங்களுக்கேற்ப இளைஞர், யுவதிகளுக்கு பயிற்சி

In
Updated: 10:39 GMT, Nov 27, 2016 | Published: 10:39 GMT, Nov 27, 2016 |
0 Comments
1241
This post was written by : hoshika

தனியார் தொழில்துறை மீதான ஆர்வத்தினை இளைஞர்களிடையே ஏற்படுத்துவதோடு, தொழிற் சந்தையின் கேள்விகளுக்கேற்ப இளைஞர்களை திறனுள்ளவர்களாக உருவாக்கும் பெரு முயற்சியினை, உலக கனடிய பல்கலைக்கழக (WUSC) நிறுவனம் முன்னெடுத்து வருகிறது என்று, அந்த அமைப்பின் சிரேஷ்ட நிகழ்ச்சித்திட்ட அதிகாரி எஸ். ஜேசுசகாயம் தெரிவித்துள்ளார்.

தொழிற்கல்வி பயிற்சி செயற்த்திட்டத்தில் கீழ் அம்பாறை மாவட்டமும் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடக செயலமர்வு நேற்று (சனிக்கிழமை) அக்கரைப்பற்று சமூக நலன்புரி (SWOAD)அமைப்பின் காரியாலய கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போதே அவர் கலந்து கொண்டு இவ்வாறு குறிப்பிட்டார்.

தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் ‘சமூக சந்தைப்படுத்தல்’ செயல் திட்டத்தின் ஊடாக சுற்றுலா – விருந்தோம்பல், மோட்டார் வாகன பழுதுபார்த்தல், கட்டிட நிர்மாணத் துறை மற்றும் தகவல் தொடர்பாடல் போன்ற நான்கு துறைகளுக்கே அதிகமான வெற்றிடங்கள் காணப்படுகின்றன.  இந்த  வெற்றிடங்களை இளைஞர், யுவதிகளைக் கொண்டு நிரப்புவதற்கு WUSC நிறுவனம், SWOAD நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றுவதாவும் தேவசகாயம் கூறினார்.

நமது இளைஞர், யுவதிகளை அரச தொழில் எனும் மாயவலைக்குள் இருந்து முதலில் மீட்டெடுக்கவேண்டும். அதன் பின்னர் தற்போது எழுந்துள்ள தொழிற் சந்தை பற்றிய அறிவை வழங்கவேண்டும். நமது நாட்டில் கணிசமான தொழில் வெற்றிடங்கள் சுற்றுலாத் துறையிலும், கட்டிட நிர்மாணத்துறையிலும் காணப்படுகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

amparai-news-01 amparai-news-02 amparai-news-03 amparai-news-04 amparai-news-05

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg