Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நான்கு ஓரினச்சேர்க்கையாளர்களை திட்டமிட்டு கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை

In
Updated: 10:43 GMT, Nov 27, 2016 | Published: 10:41 GMT, Nov 27, 2016 |
0 Comments
1266
This post was written by : Sylviya

பிரித்தானியாவில் நான்கு ஓரினச்சேர்க்கையாளர்களை ஈவிரக்கம் இன்றி கொலை செய்தவருக்கு நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஸ்டெபன் பேர்ட் (Stephen Port) என அழைக்கப்படும் 41 வயது மதிக்கத்தக்கவருக்கே மேற்குறிப்பிட்டவாறு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அவர் மீது ஏறக்குறைய 22 குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. பிறருக்கு போதைப் பொருள் விநியோகித்தமை மற்றும் பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டமை ஆகியனவும் குறித்த குற்றச்சாட்டுக்களில் உள்ளடங்கும்.

இவ்விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த  உயிரிழந்த ஆண் ஒருவரின் சகோதரர், “ஸ்டெபன் எனும் பாதகனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு விட்டது. இனிமேல் நாம் அச்சமடைய தேவையில்லை” என தெரிவித்துள்ளார்.

குறித்த கொலை வழக்கு விசாரணைக்கு வந்த போது, ஸ்டீபன் குறித்த நான்கு பேரின் தகவல்களை ஓரினச்செயற்கையாளர்களின் தகவல்கள் உள்ளடங்கிய இணையத்தளம் ஒன்றிலிருந்து பெற்றுக் கொண்டதாகவும், பின்னர் அவர்களை சூட்டுமமாக அணுகி அவர்களுக்கு போதைப் பொருட்களை கொடுத்து அவர்களை வன்புணர்வுக்கு உட்படுத்தி கொலை செய்துள்ளதாகவும்  தெரிய வந்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg