Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

125 கோடி மக்களின் முடிவு நாட்டை புதிய சக்தியாக உருமாற்றும்: ‘மன் கி பாத்’ உரையில் மோடி

In இந்தியா
Updated: 10:18 GMT, Nov 27, 2016 | Published: 10:17 GMT, Nov 27, 2016 |
0 Comments
1165
This post was written by : Shailu

125 கோடி மக்களின் முடிவு நமது நாட்டை புதிய சக்தியாக உருமாற்றும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மாதம் தோரும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் பிரதமரின் ‘மன் கி பாத்’ நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அந்தவகையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணிக்கு ஒலிபரப்பானது. இதன்போது உரையாற்றிய போதே அவர் மேற்குறித்தவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர்,

“பணத்தாள்கள் பாதிப்பிலிருந்து மீள குறைந்தது 50 நாட்கள் ஆகும். எனவே மக்களுக்கு உதவ வங்கி ஊழியர்கள் மற்றும் தபால் நிலைய ஊழியர்கள் கடுமையாக உழைக்கின்றனர்

அந்த வகையில் ரொக்கப்பணம் இல்லாத பொருளாதாரத்தை நோக்கி நாம் நகர்ந்து கொண்டிருக்கிறோம். தொழில்நுட்பத்தை முழுமையாக பயன்படுத்த வேண்டிய காலம் வந்து விட்டது.

அரசின் இந்த நடவடிக்கையின் மூலம் நாட்டில் பணத்தின் மதிப்பு உயரும் தற்போது பற்றிக் கொண்டிருக்கும் இந்த தீ நாட்டை தங்கம் போல் மின்னச் செய்யும்.

எனது இந்த நம்பிக்கைக்கு முக்கிய காரணம் மக்கள்தான். மக்கள் தற்போது படும் கஷ்டத்தை நான் நன்கு உணர்வேன். இன்னும் 50 நாட்களில் இயல்பு நிலை திரும்பிவிடும்.

70 ஆண்டுகளாக புரையோடிப் போன கறுப்பு பண விவகாரத்தை அத்துனை இலகுவாக சரிசெய்துவிட முடியாது. கடுமையான பிரச்சினை இருந்தாலும் உங்கள் ஆதரவு என்னை மகிழ்விக்கிறது.

நாட்டில் முன்னெப்போதும் இல்லாத நெருக்கடி தற்போது ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்படக்கூடிய ஆச்சரியத்தை பிறகு பாருங்கள். உங்களை தவறாக வழிநடத்துபவர்கள் பற்றி நான் கவலைப்படப்போவதில்லை

நாட்டில் உள்ள இளைஞர்கள் மற்றவர்களுக்கு இவ்வகையிலான பணமில்லாத பரிவர்த்தனைகளை கற்றுத்தர வேண்டும். இந்த புரட்சியை ஏற்படுத்த ஒவ்வொரு இளைஞரும் முன்வர வேண்டும்.

புழக்கத்தில் இருந்த 500, 1000 ரூபாய் பணத்தாள்களை ஒழிக்கும் முடிவு என்பது அவ்வளவு எளிதானது அல்ல, ஆனால், இந்த நடவடிக்கை இறுதியில் மிகப்பெரிய வெற்றியை தேடித்தரும்.

இங்குள்ள 125 கோடி மக்களின் முடிவு நமது நாட்டை புதிய சக்தியாக உருமாற்றும் என்று நான் நம்புகிறேன்.’ என அவர் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg