Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சொந்த குரலில் ‘டப்பிங்’ செய்த ‘சைத்தான்’ பட நாயகி

In சினிமா
Updated: 10:36 GMT, Nov 27, 2016 | Published: 10:36 GMT, Nov 27, 2016 |
0 Comments
1288
This post was written by : Shailu

விஜய் ஆண்டனி பிலிம் கார்பொரேஷன் சார்பில் பாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்து, அறிமுக இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சைத்தான்’.

இப்படத்தில் விஜய் ஆண்டணி ஜோடியாக நடித்திருப் பவர் அருந்ததி நாயர் நடித்துள்ள நிலையில் எதிர் வருகின்ற டிசம்பர் 1ஆம் திகதி படம் வெளியாகவுள்ளது .

இந்நிலையில், இந்த படத்தின் நடித்தது பற்றி நடிகை அருந்ததி நாயர் கருத்து தெரிவிக்கையில்,
‘என்னுடைய திரைப்பயணத்தில் ‘சைத்தான்’ படம் மிகப்பெரிய மைல் கல்லாக அமைந்திருக்கும்.

என் மீது நம்பிக்கை வைத்து, என்னை சைத்தான் படத்திற்காக தேர்ந்தெடுத்த விஜய் ஆண்டனி சாருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

‘ஐஸ்வர்யா’ என்னும் கதாபாத்திரம் மூலம் என்னுடைய திறமைகளை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பை இந்த படம் தந்திருக்கிறது. இதை நான் பெருமையாக சொல்லுவேன்.

வளர்ந்து வரும் பிற மொழி பேசும் கதாநாயகிகளுக்கு, சொந்த குரலில் ‘டப்பிங்’ செய்வதற்கு பெரும்பாலும் வாய்ப்புகள் கிடைப்பதில்லை. ஆனால் விஜய் ஆண்டனி சேர் என்னை எனது சொந்த குரலிலேயே ‘சைத்தான்’

படத்தில் பேச வைத்திருக்கிறார். இது எனக்கு எல்லையற்ற மகிழ்ச்சியை தருகிறது. என்று அவர் தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg