Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஏழைகள் பசியை தீர்ப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சி வேறு எதிலுமில்லை: சமந்தா

In சினிமா
Updated: 10:46 GMT, Nov 27, 2016 | Published: 10:46 GMT, Nov 27, 2016 |
0 Comments
1285
This post was written by : Shailu

தமிழ் சினிமாவில் விஜய், சூர்யா, தனுஷ் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தவர் நடிகை சமந்தா.

இவர் அன்மையில் ஊடகம் ஒன்றுக்கு செவ்வி ஒன்று வழங்கினார். அதில் அவர் கூறியுள்ளதாவது,

‘ஒவ்வொருவரும் சம்பாதிக்கும் பணத்தில் ஒரு பகுதியை ஆதரவு இல்லாத ஏழைகளுக்கு ஒதுக்கி அவர்களுக்கு உதவ வேண்டும்.

சம்பாதிக்கும் தொகை அனைத்தும் தனக்கே சொந்தம் என்று நினைப்பது சுயநலம். அந்த பணத்துக்கு மதிப்போ மரியாதையோ கிடையாது. அதில் ஒரு பகுதியை மற்றவர்களுக்கு பிரித்து கொடுப்பதில்தான் பொது நலமும் சந்தோஷமும் இருக்கிறது.

சமூகத்தில் நிறைய மக்கள் அடிப்படை வசதி இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள். அப்படிப்பட்டவர்களை தூக்கி விட வேண்டியது ஒவ்வொருவரின் கடமையாகும்.

1 கோடி ரூபாய் சம்பாதித்தால் அனைத்தையும் தானே சாப்பிட வேண்டும் என்று சுயநலமாக சிந்திக்காமல் ஏழைகளுக்கும் கொடுத்து உதவ வேண்டும். அப்படி உதவினால்தான் தன்னிடம் இருக்கும் பணத்தின் மதிப்பு உயரும்.

சமூக சேவைகள் செய்யும் போது கிடைக்கும் திருப்தியே தனி. மற்றவர்களுக்கு கொடுத்து வாழ்வதில் கிடைக்கும் சந்தோஷத்தை நான் அனுபவபூர்வமாக உணர்ந்து இருக்கிறேன்.

ஏழைகள் பசியை தீர்ப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சி வேறு எதிலும் இல்லை. உதவிகள் செய்யும் போது தான் நம் மீதே நமக்கு அளவு கடந்த மரியாதை ஏற்படுகிறது.

இந்த விஷயத்தை நான் தெரிந்து வைத்து இருப்பதால் தான் சமூக சேவைகளில் ஆர்வமாக ஈடுபடுகிறேன்.’ என்று அவர் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg