Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பாலியல் குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை கொடுக்க வேண்டும்: மீரா ஜாஸ்மின்

In சினிமா
Updated: 11:20 GMT, Nov 27, 2016 | Published: 11:20 GMT, Nov 27, 2016 |
0 Comments
1063
This post was written by : Shailu

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையான மீரா ஜாஸ்மின் பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களின் கதையை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள ‘பத்து கல்பனாக்கள்’ என்ற மலையாள படத்தில் நடித்து உள்ளார்.

அந்த படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், கேரள மாநிலம், கொச்சி நகரில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார்.

இந்நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மீரா ஜாஸ்மின், கருத்து தெரிவிக்கையில்,

‘பாலியல் ரீதியான குற்றங்களை தடுக்க தற்போதுள்ள சட்டங்கள் போதுமானதாக இல்லை. பாலியல்ரீதியாக பெண்களை தாக்குபவர்களுக்கு வலிமிகுந்த தண்டனை அளிக்கப்பட வேண்டும்.

இதைப்போன்ற நபர்களுக்கு ஆண்மைத்தன்மையை நீக்குவது ஒன்றுதான் சரியான வழியாக இருக்க முடியும்.

அப்படி தண்டிக்கப்பட்ட பின்னர், தங்கள் வாழ்நாள் முழுவதும் ஒருபெண்ணை தொடுவதற்கான தைரியம் அவர்களுக்கு வராது’ என்றும் அவர் குறிப்பிட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg