Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஒன்றியத்தில் பிரித்தானியா தொடர்ந்தும் அங்கம் வகிக்க வருடாந்த கட்டணம்?

In
Updated: 15:43 GMT, Nov 28, 2016 | Published: 11:11 GMT, Nov 28, 2016 |
0 Comments
1260
This post was written by : Sylviya

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலக வேண்டும் என தீர்மானித்துள்ள நிலையில், ஒன்றியத்துடன் தொடர்ந்தும் அங்கத்துவம் வகிக்க விரும்பினால், அதற்கு கட்டணம் ஒன்றை செலுத்த வேண்டும் எனும் திட்டம் ஒன்றை ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

குறித்த திட்டம் தொடர்பில் இவ்வருட இறுதிக்குள் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்கவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த பெல்ஜியத்தின் முன்னாள் பிரதமர், “ஒன்றியத்திற்கு பிரித்தானியர்கள் வருடாந்தம் கட்டணம் செலுத்தும் திட்டத்தை நான் ஆதரிக்கின்றேன். பல பிரித்தானியர்கள் தற்போது ஒன்றித்துடனான தொடர்பை முறித்துக் கொள்ள மறுப்பு தெரிவித்து வருகின்றனர். இருப்பினும், ஒன்றியத்தை விட்டு பிரித்தானியா விலகத் தீர்மானித்துள்ள நிலையில் தொடர்ந்தும் உறவுகளை பேண வேண்டுமானால் கட்டணம் ஒன்றை வருடாந்தம் செலுத்துவது வரவேற்கத்தக்கது” என அவர் தெரிவித்துள்ளார்.

பிரெக்சிற்றின் பின்னர் ஐரோப்பிய ஒன்றியத்துடன் பிரித்தானிய மேற்கொள்ளும் உறவுகள் குறித்த திட்டங்கள் அனைத்தும் எஞ்சியுள்ள 27 ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் சம்மதத்துடனேயே நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்றியத்தை விட்டு பிரித்தானியா விலகியமையின் பின்னர், பிரித்தானியாவுடனான உறவுகள் தற்போது உள்ளதைப் பார்க்கிலும் கடினமானதாகவே இருக்கும் என எதிர்கால ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவரும் மோல்ட்டாவின் பிரதமருமான ஜோசப் மஸ்கட் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனவரி மாதம் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை நிர்வகிக்கும் நாடாக மோல்ட்டா பதவியேற்கவுள்ள நிலையிலேயே மேற்குறித்த கருத்தை பிரதமர் ஜோசப் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg