Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

எம்பிலிபிட்டியவில் 48 கிலோ கஞ்சா மீட்பு: ஒருவர் கைது

In இலங்கை
Updated: 11:26 GMT, Nov 27, 2016 | Published: 11:26 GMT, Nov 27, 2016 |
0 Comments
1141
This post was written by : Varshini

எம்பிலிபிட்டிய நவநகர வடக்கு சிலுமினிகம பிரதேசத்தின் வீடொன்றிலிருந்து, 48 கிலோகிராம் கஞ்சா போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதோடு சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

விற்பனைக்கு தயாரான நிலையில், 48 பைக்கற்றுக்களில் பொதிசெய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்த நிலையில் இவற்றை மீட்டுள்ளதாக எம்பிலிபிட்டிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதலின்போதே குறித்த கஞ்சா போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. இதன்போது 30 வயதுடைய முச்சக்கர வண்டியின் சாரதி ஒருவரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர், நீண்ட நாட்களாக இதனை தொழிலாக செய்துவந்துள்ளதாக குறிப்பிட்டுள்ள பொலிஸார், நாளைய தினம் அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg