Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஃபிடெல் கஸ்ரோவின் மறைவு : பிரான்ஸ் ஜனாதிபதி இரங்கல்

In ஐரோப்பா
Updated: 12:01 GMT, Nov 27, 2016 | Published: 12:01 GMT, Nov 27, 2016 |
0 Comments
1339
This post was written by : Sylviya

கியூபாவின் புரட்சிகர தலைவர் என அனைவராலும் அழைக்கப்படும் ஃபிடெல் கஸ்ரோவின் மறைவு குறித்து, பிரான்ஸ் ஜனாதிபதி பிரான்சுவா ஹோலன்ட் (Francois Hollande) தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கருத்து தெரவித்த அவர், “20 ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் கியூபாவில் வாழ்ந்த மிக உன்னதமான மனிதர் என்றால் அது ஃபிடெல் கஸ்ரோ தான்.   எத்தகைய எதிர்ப்புக்கள் வந்த போதும் அவர் கியூபாவை காப்பாற்றுவதில் சிறிதும் தயக்கம் காட்டவில்லை” என தெரிவித்துள்ளார்.

ஃபிடெல் காஸ்ரோ கடந்த வெள்ளிக்கிழமை இரவு காலமான செய்தியை, தற்போதைய கியூப ஜனாதிபதியும் ஃபிடெலின் சகோதரருமான ராவுல் காஸ்ரோ  உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தார்.

ஃபிடெல் கஸ்ரோவை பிரான்சுவா ஹோலன்ட் கடந்த 2015 ஆம் ஆண்டு மே மாதம் முதன் முறையாக நேரில் சந்தித்தார். கியூபாவில் ஏற்பட்ட புரட்சியை தொடர்ந்து, பிரான்ஸிலிருந்து கியூபாவுக்கு சென்ற முதலாவது தலைவர் என்ற பெருமை பிரான்சுவாவையே சாரும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg