Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

‘பைரவா’ படத்தில் விஜய் சிவப்பு நிற கோட் அணிந்த காரணம் வெளியானது!

In சினிமா
Updated: 12:09 GMT, Nov 27, 2016 | Published: 12:08 GMT, Nov 27, 2016 |
0 Comments
1717
This post was written by : Shailu

இளைய தளபதி விஜய் நடிப்பில் அடுத்த வருட பொங்கலுக்கு வெளிவர தயாராகும் திரைப்படம் பைரவா.

இந்நிலையில், அன்மையில், இப்படத்தின் ஒரு சில புகைப்படங்கள் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதில் விஜய் சிவப்பு நிற கோட் அணிந்து கீர்த்தியுடன் டூயட் பாடுவது போல் ஒரு புகைப்படம் வெளிவந்துள்ளது.

இந்நிலையில், குறித்த ஆடையை வடிவமைத்த சத்யா கூறுகையில் ‘நாங்கள் படப்பிடிப்பு நடத்திய இடம் பனிப்பிரேதசம், அங்கு இடம் முழுவதுமே வெள்ளையாக இருந்ததால் கொஞ்சம் பளீர் நிறம் தேவைப்பட்டது. அதனால், தான் இந்த கலரை தேர்ந்தெடுத்தோம்’ என்று விளக்கமளித்துள்ளார்.

பரதன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பைரவா’ படத்தில்  கீர்த்தி சுரேஷ், சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வரும் இப்படத்தை விஜயா தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வருகிறது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg