Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் நடத்தும் நடிகைகளுக்கு கண்டனம்

In சினிமா
Updated: 13:46 GMT, Nov 27, 2016 | Published: 12:26 GMT, Nov 27, 2016 |
0 Comments
1687
This post was written by : Shailu
sripriya-radhika

குஷ்பு, லட்சுமி ராமகிருஷ்ணன், ரோஜா போன்ற நடிகைகள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றனர். இது மக்களின் பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தியே நடத்தப்படுகின்றது.

இந்நிலையில், 80களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்த ஸ்ரீப்ரியா சமீபத்தில் தன் டுவிட்டரில் மிகவும் கோபமாக ஒரு பதிவு செய்துள்ளார்,

இதில் ‘மக்களுக்கு பிரச்சினை என்றால் நீதிமன்றம் இருக்கின்றது. அதை விட்டு ஏன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு வரவேண்டும், அதற்கு நடுவர் வேறு?’ என மிகவும் கோபமாக ஒரு பதிவு செய்துள்ளார்.

இதனையடுத்து, தற்போது ராதிகாவும் ஸ்ரீப்ரியாவிற்கு ஆதரவு தந்தது மட்டுமில்லாமல், ‘இவை அனைத்தும் படிப்பறிவு இல்லாத மக்களை டார்க்கெட் செய்து நடத்தப்படுகின்றது’ என கோபமாக டுவிட் செய்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg