Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கை தமிழரசு கட்சின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் மாவீரர் தினம்

In இலங்கை
Updated: 15:45 GMT, Nov 27, 2016 | Published: 15:45 GMT, Nov 27, 2016 |
0 Comments
1344
This post was written by : hoshika

மட்டக்களப்பில் இலங்கை தமிழரசு கட்சின் ஏற்பாட்டில் மாவீரர்களுக்காக ஈகைச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று  மட்டக்களப்பு நல்லையா வீதியில் உள்ள இலங்கை தமிழரசு கட்சின் காரியாலயத்தில் இடம்பெற்றது

இதன் போது, கட்சின் பொதுச் செயலாளரும் கிழக்கு மாகாண விவசாய அமைச்சருமான துரைராஜசிங்கம் , நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.ஸ்ரீநேசன், சீ.யோகேஸ்வரன், மற்றும் முன்ளாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்தின், எஸ். செல்வராசா கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மா. நடராஜா ஆகியோர் மலர்தூவி  ஈகைச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்

இதனையடுத்து , பொதுமக்களும் மலர்தூவி ஈகைச்சுடர் ஏற்றியதுடன் மாவீரர்களுக்கு உணர்வு பூர்வமாக அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 4 மாவீரர் துயிலும் இல்லங்கள் இருந்ததுடன் இவற்றில் இராணுவம் முகாமமைத்து இருந்து வந்துள்ளதுடன் தற்போது இரண்டு மாவீரர் துயிலும் இல்லங்களில்  இருந்து இராணுவம் வெளியேறியுள்ளதுடன் தொடர்ந்தும் இரண்டு துயிலும் இல்லங்களில் இராணுவம் நிலைகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

batticaloa-heroes-day-news-10 batticaloa-heroes-day-news-11 batticaloa-heroes-day-news-12 batticaloa-heroes-day-news-13 batticaloa-heroes-day-news-14 batticaloa-heroes-day-news-15 batticaloa-heroes-day-news-16 batticaloa-heroes-day-news-17

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg