Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சரித்திரத்தில் முதல் முதலாக நாடாளுமன்றத்தில் மாவீரர்களுக்கு விளக்கேற்றியவர் சம்பந்தர்

In இலங்கை
Updated: 19:04 GMT, Nov 27, 2016 | Published: 17:24 GMT, Nov 27, 2016 |
0 Comments
7444
This post was written by : hoshika
tamil-heroes-day-itak-07

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன்  தலைமையிலான 22 நாடாளுமன்ற உறுப்பினர்களும் மாவீரர்களுக்கு விளக்கேற்றிய வரலாறு கடந்த 2004 ஆம் ஆண்டு உள்ளது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் இலங்கை தமிழரசு கட்சின் ஏற்பாட்டில் மாவீரர்களுக்கு ஈகைச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) கட்சின் காரியாலயத்தில் நடைபெற்றது. இதன் போது அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

எதிர்வரும் 2017 ஆம் ஆண்டு தான் உயிரோடு இருந்தால் மாவடிமுன்மாரி அல்லது வாகரை துயிலுமில்லத்தில் மாவீரர் தின ஈகைச்சுடர் ஏற்றட்டடும் சூளுரை விடுத்திருந்தார்.

கடந்த 1982 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் போரட்டத்தில் உயிர் நீத்த சங்கர் ஞாபகார்த்தமாக 1989 ஆம் ஆண்டு மாவீரர் தினம் ஆரம்பிக்கப்பட்டது. அதன் பின்னர் 2008 ஆம் ஆண்டுவரை புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியான வடகிழக்கில் 70 சத வீத நிலப்பரப்பில் 32 மாவீரர் துயிலும் இல்லங்களில் மாவீரர் தினம் இடம்பெற்று வந்தது எனவும் தெரிவித்தார்.

குறிப்பாக, மட்டக்களப்பில் தரவை, தாண்டியடி, வாகரை கண்டலடி, பட்டிப்பளை மாவடிமுன்மாரி ஆகிய பிரதேசங்களில்  4 மாவீரர் துயிலுமில்லங்கள் அமைக்கப்பட்டன எனவும் தெரிவித்தார்.

கடந்த 2002 ஆம் ஆண்டு வரை 17 ஆயிரத்து 688 மாவீரர்களும் 2009 மே 19 திகதி வரை 50 ஆயிரம் மாவீரர்கள் உயிர் நீத்துள்ளனர். இவர்களின் இந்த இழப்பின் நிமித்தம் சர்வதேச அரங்கில் தமிழ் தேசியத்தின் அரசியல் பயணம் ஜனநாயக செயற்பாட்டில் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg