Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஐ.எஸ்.எல்.: டெல்லி அணி கோல் மழை-தொடரை விட்டு வெளியேறியது கோவா

In உதைப்பந்தாட்டம்
Updated: 04:23 GMT, Nov 28, 2016 | Published: 04:23 GMT, Nov 28, 2016 |
0 Comments
1183
This post was written by : Anojkiyan

3வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரின் நேற்றைய (ஞாயிற்றுக்கிழமை) 50வது லீக் போட்டியில், எப்.சி. கோவா அணியை 5-1 என்ற கோல் கணக்கில் டெல்லி டைனமோஸ் அணி, வீழ்த்தியது.

இதுவரை 12 போட்டிகளில் விளையாடி 20 புள்ளிகளுடன் 2வது இடத்துக்கு முன்னேறி இருக்கும் டெல்லி அணி அரைஇறுதியை ஏறக்குறைய உறுதி செய்து விட்டது. அதே சமயம் 8வது தோல்வியை சந்தித்த கோவா போட்டியை விட்டு வெளியேறியது.
டெல்லியில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டெல்லி டைனமோசும், எப்.சி. கோவாவும் மோதின.

மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியின், 31வது நிமிடத்தில் கோவா வீரர் புல்கன்கோ கார்டோஜோ முதல் கோல் அடித்தார். இதையடுத்து ஆக்ரோஷமடைந்த டெல்லி அணி, தாக்குதல் பணியை தொடங்கியது.

எல்லாவற்றிலும் ஆதிக்கம் செலுத்திய டெல்லி அணி கோல் மழை பொழிந்தது. மார்செலோ பெரீரா ஹெட்ரிக் (38, 48, 56வது நிமிடம்) கோலும், ரிச்சர்ட் காட்ஸி (51, 57வது நிமிடம்) 2 கோலும் அடித்து ரசிகர்களை இன்பவெள்ளத்தில் ஆழ்த்தினர்.

டெல்லி அணியின் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல், திக்குமுக்காடிய எப்.சி. கோவா அணி, இறுதிவரை போராடியும் கோல் போடமுடியவில்லை. இதனால் போட்டியின் முடிவில் டெல்லி அணி 5-1 என்ற கோல் கணக்கில் கோவாவை வீழத்தியது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg