Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நேபாளத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5.5ஆக பதிவு

In
Updated: 04:27 GMT, Nov 28, 2016 | Published: 04:24 GMT, Nov 28, 2016 |
0 Comments
1330
This post was written by : Sambavi

நேபாளத்தில் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுக்கோலில் 5.5 ஆக பதிவானதாக அந்நாட்டின் புவிசார் ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தலைநகர் காத்மண்டுவில் இருந்து சுமார் 150 கிலோமீற்றர் தொலைவில் எவரெஸ்ட் சிகரத்தின் அடிவாரத்தில் அமைந்துள்ள சோலுகும்பு மாவட்டத்தை மையமாக கொண்டு, இந்த நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளது.

பூமிக்கு அடியில் சுமார் பத்து கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இன்று அதிகாலை சுமார் 5.05 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுக்கோலில் 5.5 அலகுகளாக பதிவானதாக அந்நாட்டின் புவிசார் ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

கிழக்கு நேபாளத்துக்கு உள்ளிட்ட பல பகுதிகள் மற்றும் காத்மண்டு நகரில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இன்றைய நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் சேதம் தொடர்பான உடனடி தகவல் ஏதும் இதுவரை வெளியாகவில்லை.

அதேவேளை, மிதமான நிலநடுக்கம் என்பதனால் உயிரிழப்புக்கள் நேர்ந்திருக்க வாய்ப்பில்லை என் கூறும் அதிகாரிகள் இருப்பினும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளை விரைந்து முன்னெடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படும் சாத்தியக் கூறுகள் கொண்ட புவியியல் அமைப்பில் அமைந்துள்ள நேபாளத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து இதுவரை ரிக்டர் அளவுகோலில் நான்காகவும் அதற்கு அதிகமாகவும் 475 முறைகள் நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg