Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிம்பாப்வேவை சாய்த்து கிண்ணத்தை கைப்பற்றியது இலங்கை அணி

In கிாிக்கட்
Updated: 04:45 GMT, Nov 28, 2016 | Published: 04:45 GMT, Nov 28, 2016 |
0 Comments
1278
This post was written by : Anojkiyan

முத்தரப்பு ஒருநாள் தொடரின் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற சிம்பாப்வே அணிக்கெதிரான இறுதிபோட்டியில், இலங்கை அணி 6 விக்கெட்டுகளால் வெற்றி பெற்று கிண்ணத்தை வென்றுள்ளது.

ப்யூலேவேயொ மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி, இலங்கை அணியின் பந்து வீச்சாளர்களின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் 36.3 ஒவர்களுக்கு 160 ஒட்டங்கள் பெற்றிருந்த நிலையில், சுருண்டது.

இதன்போது அணியின் அதிகபட்ச ஒட்டமாக, மசகட்சா 36 ஒட்டங்களை பெற்றுக்கொள்ள, பந்து வீச்சு சார்பில், வென்டர்சே மற்றும் குணரட்ண ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளை சரித்தனர்.

இதைதொடர்ந்து, 161 என்ற எளிய வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய இலங்கை அணி, ஆரம்பத்தில் சற்று தடுமாறினாலும், 37.3 ஒவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை கடந்தது.

அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்த குசல் மென்டிஸ் மற்றும் அணிதலைவர் உபுல் தரங்க தலா 57 ஒட்டங்களை பெற்றுக்கொண்டனர். பந்து வீச்சில் விட்டோரி 3 விக்கெட்டினை வீழ்த்தினார். போட்டியின் ஆட்டநாயகனாகவும், தொடரின் நாயகனாகவும் குசல் மென்டிஸ் தெரிவுசெய்யப்பட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg