Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜப்பானிய பெண்ணை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இளைஞன் கைது

In இந்தியா
Updated: 04:49 GMT, Nov 28, 2016 | Published: 04:42 GMT, Nov 28, 2016 |
0 Comments
1213
This post was written by : Elakkiya

இந்தியாவுக்கு சுற்றுலாப் பயணியாக சென்ற ஜப்பானிய பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு  உட்படுத்திய 25 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தெற்கு இந்தியாவின் கேரள மாநிலத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இது குறித்து இந்தியாவின் தெற்கு கேரளா மாநில மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் கருத்து தெரிவிக்கையில் பாதிக்கப்பட்ட பெண் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் 25 வயதுடைய தேஜா என்ற குறித்த இளைஞன் நேற்று முன்தினம் சனிக்கிழமை கைது செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

மேலும் பாதிக்கப்பட்ட பெண் பிரசித்தமாக கடற்கரை பகுதியான கோவலம் கடற்கரைப் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு  உட்படுத்தப்பட்டதாக கேரள பொலிஸ் கமிஷனர் ஸ்பர்ஜன் குமார் தெரிவித்துள்ளார்.

அத்துடன் குறித்த பெண் வழங்கிய தகவலின் பிரகாரம் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் நீதவான் நீதிமன்றில் அறிக்கை சமர்பித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

சந்தேகநபரான தேஜா பொலிஸாரின் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg