Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நாடுகளைக் கடந்த கியூப தலைவரின் புகழ்: அஞ்சலி செலுத்தும் சர்வதேசம்

In
Updated: 05:09 GMT, Nov 28, 2016 | Published: 05:09 GMT, Nov 28, 2016 |
0 Comments
1187
This post was written by : Sambavi

கியூபாவின் புரட்சியாளரும், முன்னாள் ஜனாதிபதியும், கியூபாவின் நீண்ட கால ஆட்சியாளர் என்ற கௌரவத்தை தன்னகத்தே கொண்டவருமான ஃபிடேல் காஸ்ரோவின் மறைவிற்க்கு பல்வேறு நாடுகளும் இரங்கல் தெரிவித்து வருவதுடன், மக்கள் தமது துயரை பல்வேறு வழிகளிலும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஃபிடேல் காலமானார் என்ற செய்தி அவரது சகோதரன் மற்றும் தற்போதைய கியூப ஜனாதிபதி ராவுல் காஸ்ரோவினால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், சர்வதேச நாடுகளில் அரசியல் தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் என பலரும் ஃபிடேலின் மறைவு தொடர்பில் தமது இரங்கலை வெளிப்படுத்தினர்.

இந்த நிலையில், ஈக்குவடோர், மெக்ஸிகோ போன்றவற்றிலும் மக்கள் மறைந்த புரட்சித் தலைவனுக்கு தமது அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.

அந்த வகையில், ஈக்குவடோர் தலைநகர் க்விடோவில் தேசிய அரங்கத்தின் முன்னால் ஒன்று கூடிய மக்கள் தமது அஞ்சலியை செலுத்தியிருந்தனர். இது நாடு கடந்த ஃபிடேல் காஸ்ரோவின் பெருமையை எடுத்துக்கூறும் விடயம் என் சர்வதேச ஊடகங்கள் சுட்டியுள்ளன.
இதேவேளை, மெஸ்சிகோவில் உள்ள கியூப தூதரகத்திற்கு முன்னால் ஒன்று கூடிய மக்கள் ஃபிடேலிற்கான தமது அஞ்சலியை செலுத்தியிருந்தனர்.

எதிர்வரும் டிசம்பர் 4ஆம் திகதி இறுதிச்சடங்குகள் இடம்பெற உள்ள நிலையில், கியூபாவில் தொடர்ந்தும் மூன்றாவது நாளாக இன்றும் பல்வேறு இடங்களில் மறைந்த தமது தலைவருக்கான அஞ்சலி நிகழ்வுகள் அம்மக்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக அங்குள்ள தேவாலயங்களில் விஷேட ஆராதனைகள் மற்றும் ஆத்மசாந்தி பிரார்த்தனைகள் போன்றனவும் நடைபெற்று வருகின்றன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg