Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பார்முலா 1 கார் பந்தயம்: முதல் முறையாக சம்பியன் பட்டம் வென்றார் ரோஸ்பெர்க்

In விளையாட்டு
Updated: 05:54 GMT, Nov 28, 2016 | Published: 05:32 GMT, Nov 28, 2016 |
0 Comments
1161
This post was written by : Anojkiyan

2016ஆம் ஆண்டுக்கான பார்முலா 1 கார் பந்தயத்தில் முதல் முறையாக மெர்சிடெஸ் பென்ஸ் அணியின் நிகோ ரோஸ்பெர்க் சம்பியன் மகுடம் சூடியுள்ளார்.

21 சுற்றுகளாக நடைபெறும் குறித்த பார்முலா 1 கார் பந்தயத்தின், இறுதி அபுதாபி கிராண்ட் பிரிக்ஸில் ஹெமில்டன் 55 சுற்றுகளை ஒரு மணி நேரம் 47.213 நிமிடத்தில் கடந்து முதல் இடம் பிடித்தாலும், புள்ளிகளின் அடிப்படையில், 5 புள்ளிகள் பின் தங்கி சம்பியன் பட்டத்தை நழுவவிட்டார்.

20 போட்டிகளின் முடிவில் மெர்சிடெஸ் பென்ஸ் அணியின் ரோஸ்பெர்க் 367 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் இருந்தார். அதே அணியின் ஹெமில்டன் 355 புள்ளிகளுடன் 2வது இடத்தில் இருந்தார். ரோஸ்பெர்க் 12 புள்ளிகள் வித்தியாசத்தில் முதல் இடத்தில் இருந்தார்.

அபுதாபி கிராண்ட் பிரிக்ஸில் முதல் இடம் பிடிக்கும் வீரருக்கு 25 புள்ளிகள் வழங்கப்படும். 2வது இடம் பிடிக்கும் வீரருக்கு 18 புள்ளியும், 3வது இடம் பிடிக்கும் வீரருக்கு 15 புள்ளியும், 4வது இடம் பெறும் வீரருக்கு 12 புள்ளியும், ஐந்தாவது இடத்தை பிடிக்கும் வீரருக்கு 10 புள்ளிகளும் வழங்கப்படும்.

அந்தவகையில், ரோஸ்பெர்க் ஒரு மணி நேரம் 46.912 நிமிடத்தில் கடந்து 2வது இடத்தைப் பிடித்தார். முதல் இடம்பெறும் நபருக்கு 25 புள்ளிகள் வழங்கப்படும் என்பதால், அதனடிப்படையில் ஹெமில்டன் 25 புள்ளிகளுடன் 380 புள்ளிகள் பெற்றார்.

2வது இடம்பெறும் நபருக்கு 18 புள்ளிகள் வழங்கப்படும் என்பதால், அதனடிப்படையில் ரோஸ்பெர்க் 18 புள்ளிகளுடன் 385 புள்ளிகள் பெற்று சம்பியன் பட்டத்தை தனதாக்கினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg