Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

யாழ். பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் காலவரையறையற்ற வேலைநிறுத்தம்

In இலங்கை
Updated: 05:16 GMT, Nov 28, 2016 | Published: 05:15 GMT, Nov 28, 2016 |
0 Comments
1224
This post was written by : Varshini

யாழ்.பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள், இன்று (திங்கட்கிழமை) காலை முதல் காலவரையறையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சம்பள நிலுவை உள்ளிட்ட பல பிரச்சினைகள் தொடர்பாக ஏற்கனவே முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பில் போதுமான முன்னேற்றங்கள் இல்லாததால், இவ் வேலைநிறுத்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக யாழ்.பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் தலைவர் சி.தங்கராஜா தெரிவித்துள்ளார்.

தமது கோரிக்கைகள் தொடர்பாக ஏற்கனவே கடந்த மாதம் 12ஆம் திகதியன்று பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் பதிவாளருக்கு கடிதம் அனுப்பியிருந்ததோடு, கடந்த மாதம் 19ஆம் திகதி ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்திலும் ஈடுபட்டிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து எவ்வித தீர்மானங்களும் கிடைக்கப்பெறாத நிலையில், கடந்த 25ஆம் திகதி நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் இன்றைய வேலைநிறுத்தம் இடம்பெறுவதாக யாழ்.பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

strike-3 strike-1

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg